முன்னைய ஜனாதிபதிகளின் நடவடிக்கைகள் காரணமாகவும் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்துள்ள ஹர்ச டி சில்வா முன்னாள் ஜனாதிபதிகள் தவறான முடிவுகளை எடுத்தார்கள் அதுவே தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
வியட்நாம் பங்களாதேஸ் போன்ற நாடுகள் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன்னோக்கி நகர்ந்த அதேவேளை உள்நோக்கி சிந்திக்கும் கொள்கைகள் காரணமாக இலங்கை தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகள் கூட இலங்கைக்கு உதவ தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் கூட சவுதிஅரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் இலங்கைக்கு உதவிவழங்க தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.