முஸ்லிம் முதலமைச்சர் பதவி இல்லாமல் போய்விடவேண்டும் என்று எண்ணுகின்ற சமூகத்தை பார்த்து நான் வெட்கப்படுகின்றேன் என முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹ்மத் தெரிவித்துள்ளார். மக்கள் நியாயமாகத்தான் சிந்திக்கின்றார்கள் என்பதனை நசீர் அஹ்மத் புரிந்துகொள்ள வேண்டும். நசீர் அஹ்மத் பதவி ஏற்பதற்கு முன்னும் முதலமைச்சராக இருந்தவர் முஸ்லிம்தான் அவரது பதவியை பறித்துத்தான் நீங்கள் அரியணை ஏறினீர்கள் என்பதனை நீங்கள் மறந்துவிடீர்கள்.
மக்கள் நீங்கள் தொலைந்து போய்விடவேண்டும் என நினைத்ததற்கு நிறையவே காரணங்கள் இருக்கிறது அதிலும் குறிப்பாக இரவோடு இரவாக இணைக்கப்பட்ட வடகிழக்கு பிரிந்து, மக்கள் நிம்மதிகாற்றினை சுவாசிதுக்கொண்டிருக்கும்வேளை,
எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும் என்றதொரு கட்டாய நிலைமை தோன்றினால் ,பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம்களும் தனித்தரப்பாக கலந்துகொள்வதற்கான கேடயமாக இருந்த கிழக்குமாகான சபையின் அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கான கோவைகளை, தனது பதவி நீடிப்புக்காக, சிந்திப்பதற்கு கூட நேரம் எடுக்காமல் கையை உயர்தி ஆதரித்து எம்சமூகத்தை அடைமானம்வைத்த உங்களது தீர்மானத்துக்கெதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது நீங்கள் தொலைந்துபோய்விட வேண்டும் என மக்கள் பிரார்தித்திருக்கலாம்.
இல்லையென்றால், அகதிகளாக வந்த ரோகிங்கிய முஸ்லிம்களை சிங்கள கடும்போக்காளர்கள் தாக்கமுற்பட்டபோது அம்மக்களை வட மாகாணத்துக்கு அனுப்பிவையுங்கள் நாங்கள் பாதுக்காகின்றோம் என சிவாஜலிங்கம் கூறி வெளிநாடுகளில் ஒருதாக்கத்தை ஏற்படுத்தினார்.
ஆனால் மு காங்கிரசின் உச்ச அடைவு கிழக்கு மாகான சபையின் முதலமைச்சுதான் என மார்புதட்டிக்கொண்டு சுற்றுலா வந்த நீங்கள், புரோடகோல் விடயத்தில் தனது சுயமரியாதை போய்விட்டதாக எண்ணி விரல்நீட்டி பேசி தேசிய ஊடகங்களுக்கு அறிக்கைவிட்ட நீங்கள், அகதிகளாக வந்த முஸ்லிம்களை கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பிவையுங்கள் என கூறி இந்தநாட்டில் வேறு பிரச்சினை உள்ளது என்பதை வெளியுலக்குக்கு எடுத்துக்கூற முடியாத கோழையாக, தாம் ஏதாவது பேசப்போய் தமது பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் பேசா மடந்தையாக இருந்த உங்களது இருப்பு தொலைந்து போக வேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கலாம்.