மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் முதியவர் ஒருவர் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (30) காலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அமிர்தகழி ஆனந்தன் வீதியைச் சேர்ந்த 69 வயதுடைய தியாகராஜா பத்திராஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளர்.
குறித்த நபர் நடக்க முடியாத நிலையில் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் தனக்கு வாழ்கை வெறுத்து போயுள்ளது என கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு சம்பவதினமான இன்று காலை 9 மணியளவில் சமையலறை பகுதியில் தனக்குத்தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள அவரின் சடலம் பிரோத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]