சென்னை மாநகராட்சிக்கு புதிய மேயராக பிரியா ராஜன் போட்டியின்றி தெரிவாகி இருக்கிறார். தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ம் திகதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் திமுக அனைத்து மாநகராட்சிகளிலும் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து மார்ச் 4 ஆம் திகதியான இன்று மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தலும், பதவியேற்பும் நடைபெறும் நடைபெற்றது.
இதில் 300 ஆண்டு காலத்திற்கு மேலான பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சியின் நாற்பத்தியேழாவது மேயராக பிரியா போட்டியின்றி தெரிவானார்.
அதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி மேயரை அவருக்குரிய ஆசனத்திற்கு அழைத்து வந்து அமரச் செய்தார். அவருக்கு மேயர் பதவிக்கான அங்கியும், செங்கோலும் வழங்கப்பட்டது, இவருக்கு பிரத்தியேக தங்க சங்கிலியும் அணிவிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் புதிய மேயராக பதவி ஏற்றிருக்கும் பிரியா ராஜனுக்கு அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவின் முன்னணி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள இருபத்தியோரு மாநகராட்சிகளில் கும்பகோணம் மாநகராட்சி திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 20 மாநகராட்சிகளில் 16 மாநகராட்சியில் திமுகவினர் போட்டியின்றி தெரிவாகி மேயர் பதவியை ஏற்றுக்கொண்டனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]