முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பில் சிறிலங்கா நாடாளுமன்றம் நடுங்குகிறது
பல நாட்டின் கூட்டோடு நடத்திய போரின் இழப்புகளும் துயரங்களும் குடும்பங்களையும், ஈழத்தமிழர் உலகெங்கும் வாழும் உணர்வாளர்களையும் விட்டுப் போகவில்லை.
இருப்பின் உயிலும் வாழ்வின் உறுதியும் நிரந்தரமாக வேண்டுமென்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும் வேளையில் பச்சோந்திகளாக மாறி, விடுதலை வழிகளையே மாற்றப் புறப்பட்டிருக்கும் புல்லுருவிகள் மத்தியில், நின்றாடும் இந்த இக்கட்டான நேரத்தில் ஜெயலலிதாவின் வாக்குறுதியின் தலையீட்டுக் கருத்தும் நம்பிக்கை தருகிறது.
தகர்ந்து போகாதவாறு அ.தி.மு.க ஆட்சியின் கோட்டை நுழைவு துவண்டு போன எம்மைத் துள்ளித் துள்ளி எழவைத்துள்ளது.
ஈழத்தமிழர் அக்கறையாக ஜெயலலிதாவின் மூலமான விசயம் எதிர்க்கட்சி எத்தகைய அழுத்தங்கள் கொடுத்தாலும் அவற்றைச் சமாளித்து தடையேற்படாமால் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும்.
தனித்து விடப்பட்ட நமக்கு பயன்தரும். உள்நாட்டுப் பிரச்சினை என்று பீச்சியடித்திக் கொண்டிருக்கும் பேரினவாத ஆட்சியாளர்களுக்கு நாளும் விழப்போகும் சவுக்கடியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
உயிருக்கும் உடமைக்கும் போராடிய மக்களைப் பயங்கரவாதியென்று சித்தரித்த கேலிச்சித்திரம் இன்றும் மறையவில்லை.
இந்தத் துயர்நீங்காத வேளையில் ஜெயலலிதாவின் வாக்குறுதிகள் தமிழனுக்கு நிறைவேற வேண்டும் என்பது முக்கியமல்ல.
ஜெயலலிதாவின் வரவால் சிங்கள அரசாங்கம் அடைந்திருக்கும் அச்சமும் பயமும் நடுக்கம் இனவெறியரைப் பேரிடியின் பேரதிர்ச்சியில் நிறுத்தியுள்ளது. அதுவே தன்மானம் உள்ள தமிழனுக்குப் பேரானாந்தம்.
ஜெயலலிதாவின் வெற்றி என்பது சட்டமன்றத்தில் அரியாசனத்தில் அமர்வார்கள் என்பதும் பொதுவாகவும் மிக மிகக் கவனமாகவும் ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்த வாழ்த்துக்குரிய விடயம்.
சிறிலங்காவில் மாறி மாறிவந்த பேரினவாதத் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் மீதான அடக்குதலுக்கும் தாக்குதலுக்கும் அழிப்பிற்கும் ஜெயலலிதவின் கட்சியும் ஆட்சியும் பயத்தை விதைத்து நடத்தையை அச்சுறுத்தியுள்ளது என்பதே உண்மை.
ஜெயலலிதா எடுக்கும் ஈழத்தமிழர்களுக்கான தீர்வுகளில் எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் தமிழர் கட்சியென்று தமிழினத்தையே அழித்த தி.மு.க.வும் கொலைகாரக் காங்கிரசும் என்ன வழிமுறையில் ஒத்தாசையாக ஒத்தாடுவார்கள் என்பதுதான் இப்போதிருக்கும் மிகப்பெரும் சர்ச்சைக்குரிய சமாச்சாரம்.
இவர்கள் ஈழத்தமிழர் நலன் சார்ந்த தீர்மானங்களுக்கு எதிர்ப்பைத்தான் விதைப்பார்கள். எளிதில் எதையும் நிறைவேற்ற முடியாது.
கருணாநிதியும், சோனியாவும் சாதக பாதங்களை அரவணைப்பார்களா, அழிப்பார்களா என்பதும் நீர்க் கோலத்திற்கு வரும் எழுத்து நிலைமையத்தான் பார்க்கப் போகின்றோம்.
பலமான எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் இரண்டு திமிங்கலங்களும் கொடிய நச்சுப் பாம்புகள் சட்டசபையில் ஈழத்தமிழர் பிரச்சினையை பிரச்சினையாக்கவே முனைவார்கள் சார்பான தீர்மானஙகளை முடக்க இடையூறுகள் செய்வார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம்.
ஈழத்தமிழர்களுக்குத் தூரோகம் செய்ததுடன் தொப்பிள் கொடி உறவறுத்த உத்தமர்கள் கட்சிகள் காங்கிரசும்-தி.மு.க..என்பதையும் நாம் அறிவோம். இவர்களை ஜெயலலிதா எதிர்கொண்டு வெல்வார் என்பது அவரின் ஆளுகையில் தெரிந்த விடயம் .
ஜெயலலிதா என்ன சொன்னார், என்ன செய்ய முடியும் என்பது ஈழத்தமிழனுக்கு முக்கியமல்ல. அ.தி.மு.க கட்சியின் ஆட்சியைப் பற்றிக் கருத்துக் கூறவும் இதுவல்ல நேரம்.
ஜெயலலிதா வாய் திறந்து கூறிய வார்த்தைகளின் குண்டு விழுந்தவுடன் சிறிலங்கா அரசாங்கம் அடைந்த பயம், ஆணவம் அடங்கிய முணுமுணுப்புடனான கோபம், நிஜமான காரணங்களாக நாடளுமன்றத்தில் எதிரொலித்தது.
ஏக்கம் சிரசிலடித்து திக்பிரமை பிடித்ததைக் கண்டோம். இந்த ரோசம் கெட்டநிலை தமிழனுக்குக் பெருமையளித்த நிமிர். இதில்நின்று ஈழத்தமிழர்களுக்கு சாதகமா, பாதகமா என்று ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை.
ஜெயலலிதா எமக்கா பலமுறை சாதகமாகவே இருந்து வருகின்றதைக் காணும் கண்களுக்கு முன்னம் விளைந்த தவறுகள் புலப்பட்டாலும், அதிக பாதிப்பு ஏற்பட இடந்தரவில்லை.
தனித்து விடப்பட்ட நமக்கு உதவும் வழிகளில் இக்கட்டான இக்காலகட்டத்தில் கட்டாயம் ஜெயலலிதா எமக்குத் தேவை.
எங்களது வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் நீதிமானும் இதையே விரும்பி வரவேற்கின்றார்.
அறியாமையும் ஆதரவற்ற ஒத்தசையற்றதும் இன்றளவும் நம் இனத்தோடு பின்னிப் பிணைந்து கிடக்கும் சாபக்கேடு.
சரியானவற்றை இந்தநேரத்தில் அறிந்து கொள்ள வேண்டும். நமது விழிப்புணர்வின் விபரிப்புச் சிந்தனைக்கு ஜெயலலிதாவின் அறிவிப்புகளும் ஆதரவும் சாதகமானதாகவே உள்ளது.
வடமாகாண முதலமைச்சரின் செயல்பாடுகளில் அச்சமடைந்து எதிரி அடங்குகிறான்.
ஜெயலலிதாவின் அறிவித்தலின் அஞ்சாமை அற்ற மனப்பான்மை கண்டு விரோதி வியப்பில் விழி பிதுங்கிக் கிடக்கிறான்.
ஜெயலலிதாவைச் சந்திக்கப் போகும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது பாய்கிறான். அறிவைப் பயன்படுத்தும் நீதிபதி அச்சப்படமாட்டார்.
தலைவரின் அஞ்சாமையை நாம் இன்று வடமாகாண முதலமைச்சரிடம்தான் காண்கிறோம்.
தமிழ்நாடு மேடைகளில் விமர்சனங்கள் நர்த்தன மிட்டன. 2016 மே.16 தேர்தல் மேடைகளில் அரசியல் நாகரீகத்தை அசிங்கமாக்கிய போதும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பேச்சில் நிதானமும் ஈழத்தமிழர் மீதான கவனமும் தெளிந்தளவானதை அவதானிக்கலாம்.
விடுதலைப் புலிகள் மீதான விமர்சனங்கள் இருந்தாலும் பகையாக எடுத்துக் கொள்ள இதுவல்ல நேரமும் அரசியல் நகர்வும்.
விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சு வார்த்தைகளை இந்தியாவில் நடத்த அனுமதிக்குமாறு 2002 ஜனவரி கோரிக்கை வைத்தபோது அப்போது தமிழ்நாட்டில் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் அண்ணா தி.மு.க ஆட்சி.ஜெயலலிதா விடுதலைப்புலிகளின் வேண்டுகோளைக் கடுமையாக எதிர்த்தார்.
தடைக்கும் ஆதரவு கொடுத்தவர் 10 ஜனவரி 2002 முதலமைச்சர் ஒ.பன்னீர்ச்செல்வம் “தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் இருப்பை பொறுத்துக் கொள்ள இயலாது”என்று இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.
இதைவிடத் தவறுகள் பல உள்ளன…
உண்மைதான் தவறுகள் தள்ளிக் போகட்டும், அன்று இவைகள் நமக்கு தாக்கத்தைத் தரவில்லை.
2009க்குப் பின்னர் ஈழத்தமிழர்கள் பலர் தரக்குறைவாகவும் கள்ளர்களாக, ஏமாற்றுப் பேர்வழிகளாக, துரோகிகளாக இப்படிவந்து குவிந்துள்ளார்களே இந்த குழுக்களையும் பட்டியலையும் யாருக்குப் போய்க் கடிதம் எழுதுவது?
அக்கறையற்ற போக்குகள் கண்டு யார்தான் அக்கறை எடுப்பது? நாள்தோறும் கண்ணீர்தான் தமிழனுக்கு அற நெறிமுறையா?
புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் தொடங்கிய காலம் பிறர்நாட்டு வீதிகளில் நின்று அழுத கண்ணீர் கண்டு பிரான்சில் வாழும் ஈழக்கவிஞன் கவிதைகள் கண்ணீர் வடித்ததுடன், தமிழ்மக்கள் நின்றழுத கண்ணீரில் ஆறாவது உப்புச் சமுத்திரம் உருவெடுத்து விட்டதென்று எழுதினார்.
இன்று ஜெயலலிதாவின் செயல்பாடுகளை எதிர்பார்த்துத் தொழுகின்றார். நமக்கும் மண்மக்களுக்கும் இப்போது அடிப்படையில் ஜெயலலிதாவின் ஈடுபாடு ஒத்தசை முயற்சிகள் நெருக்கமாகக் கிடைப்பது அவசியமானது.
அ.தி.மு.க.வின் தீர்மானங்களுக்கு தி.மு.க-காங்கிஸ் முட்டுக்கட்டை போட்டு குழப்படி செய்யாதிருந்தால் ஆரோக்கியமானதாகும்.
எதிர்கொண்டு வெல்ல வேண்டும் தனிமைப்படுத்தபட்டு தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்க்கு ஜெயலலிதா கடந்தகாலத் தவறுகளை உணர்ந்திருப்பதால்தான் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு அழைப்பு விடப்பட்டிருக்கிறது.
விரைவுச் சந்திப்பும் இடம்பெற இருக்கிறது. நல்லிணக்கத்தை உருவாக்கி அரசியல் விசயங்களைப் பேசி புரிந்துணர்வுடன் நற்கருமமாக விளங்கப் பயணம் செயற்படட்டும்.