கொழும்பில் இதுவரையில் முதற்கட்ட தடுப்பூசியையேனும் பெற்றுக் கொள்ளாதவர்கள் சுகததாச அரங்கிற்கு சமூகமளித்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் இதுவரையில் முதற்கட்ட தடுப்பூசியையேனும் பெற்றுக் கொள்ளாதவர்கள் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால், இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட ஆலோசனை வழங்கப்பட்டது.
அதற்கமைய முதற்கட்டமாகவேனும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பிரஜா பொலிஸ் ஊடாக, சுகாதார அதிகாரிகள் மற்றும் கொழும்பு மாநகரசபை அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சுகததாச அரங்கிற்கு இவ்வாறான நபர்களை அழைத்து வந்து, தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 50,000 பேருக்கு இவ்வாறு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. எனவே இதுவரையில் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதோர் சுகததாச அரங்கிற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news