முதன்முறையாக அதர்வாவுடன் இணையும் பிரபல பாலிவுட் இயக்குனர்
அதர்வா, நயன்தாரா நடிப்பில் மிக விரைவில் உருவாகவுள்ள படம் இமைக்கா நொடிகள். இப்படத்தை டிமாண்ட்டி காலனி என்ற திகில் படத்தை கொடுத்த அஜய் ஞானமுத்து இயக்கத்தில், கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளது.
ஏற்கனவே இப்படத்தில் ஒரு பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் கவுதம் மேனனுடன் பேச்சுவார்த்தை நடந்தது, ஆனால் சில காரணத்தினால் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு பல யோசனைக்கு பிறகு பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்புடன் பேச்சு வார்த்தை நடந்து, அவரும் கதை கேட்டு உடனே ஓகே சொல்லி இன்று தனது ட்விட்டர் தளத்திலே நடிக்க போவது பற்றி தெரிவித்துள்ளார்.
இந்த கதாபாத்திரத்தின் பெயர் ருத்ரா என்று தற்போதே முக்கிய கதாபாத்திரத்தின் பெயரை வெளியிட்டுள்ளது படக்குழுவின் தைரியத்தை காட்டுகிறது.