உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் முதலாவது சபை அமர்வு ஆரம்பிக்கப்படாத சபைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
யாழ்ப்பாணத்தில் ஊர்காவற் றுறைப் பிரதேச சபை, கிளிநொச்சியில் பூநகரி பிரதேச சபை, முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு பிரதே சபை, வவுனியாவில் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை என்பனவே 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
பூநகரி, புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஊர்காவற்துறைப் பிரதே சபையில் ஈ.பி.டி.பியும், வவுனியா தெற்கு சிங்களப் பிரதே சபையில் சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியும் ஆட்சி அமைக்கவுள்ளன.
மேற்படி அரசியல் கட்சிகள் குறித்த சபைகளின் மொத்த ஆசனங்களில் 50 வீதம் அல்லது அதற்கு மேலதிகமாகப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சபைகளின் முதலாவது அமர்வு, மேற்படி கட்சிகளின் செயலர்களால் பெயர் குறிக்கப்பட்ட தவிசாளர் தலைமையில் இடம்பெறும்.