டெல்லி: முட்டை சாப்பிடுவது கோழிகள் மீதான வன்கொடுமை, ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை ஆதரிக்கும் செயல் என்றும் முட்டை சாப்பிடுபவர்கள் பெண்ணியவாதியாக இருக்க முடியாது எனவும் பீட்டா இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.பெண்கள் தினத்தை முன்னிட்டு பீட்டா இந்தியா அமைப்பின் ஊட்டச்சத்து நிபுணரும் மருத்துவருமான கிரண் அஹுஜா விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், “தற்போது பெண்ணியவாதம் பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால், பாலினவாதம் வளர்ந்து வருகிறது. மீடூ இயக்கத்தின் மூலம் எதுவாக இருந்தாலும் ஒப்புதலுடன் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டு இருக்கிறது.
மனிதர்களும் விலங்குகளும் சமம்
பெண்ணியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் மற்ற உயிரினங்களில் உள்ள பெண் பாலினம் குறித்தும் அக்கறை செலுத்த வேண்டும். பெண்ணியத்தை ஏற்றுக்கொண்டவர்கள், மற்ற உயிரினங்கள் மனிதர்களை விட தாழ்வானவர்கள் என்று கருதுவதை நிறுத்த வேண்டும். மனிதர்களை விட விலங்குகளுக்கு வியப்பிற்குரிய திறன்கள் இருந்தும் அவற்றை தாழ்வாக நினைப்பது மூட நம்பிக்கை.
பசுக்கள் கறக்கும் பால் கன்றுகளுக்கே சொந்தம்:
பெண் பாலின உயிரினங்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றன. குறிப்பாக அவற்றின் இனப்பெருக்க திறன் லாப நோக்கத்துக்காக சுரண்டப்பட்டு வருகின்றன. அதன் வலி தாய்மார்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் புரியும். பசுக்களும் எருமைகளும் பால் உற்பத்திக்காக தொடர்ந்து கர்ப்பம் தரிக்க வைக்கப்படுகின்றன. மனிதர்களை போல பசுக்கள் தங்கள் குழந்தைகளுக்காக மட்டுமே பால் சுரக்கின்றன. ஆனால், பால் விவசாயிகள் பசுக்களின் மலக்குடலில் கைகளை சொருகியும், பிறப்புறப்பில் கம்பியை திணித்தும் துன்புறுத்துகிறார்கள்.
பெண்ணியவாதிகள் சைவம் சாப்பிட வேண்டும்
பெண்கள் யாருடைய உடைமையும் இல்லை என்பதை போல் மற்ற உயிரினங்களும் யாருக்கும் சொந்தமில்லை என்பதை உணர வேண்டும். எனவே சர்வதேச மகளிர் தினத்தில் மற்ற உயிரினங்கள் மீதான அனைத்து கொடுமைகளுக்கும் பெண்ணியவாதிகள் முற்றுப்புள்ளி வைக்க சைவ உணவுகளை சாப்பிட வேண்டும்.
பசுக்கள் கறக்கும் பால் கன்றுகளுக்கே சொந்தம்:
பெண் பாலின உயிரினங்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றன. குறிப்பாக அவற்றின் இனப்பெருக்க திறன் லாப நோக்கத்துக்காக சுரண்டப்பட்டு வருகின்றன. அதன் வலி தாய்மார்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் புரியும். பசுக்களும் எருமைகளும் பால் உற்பத்திக்காக தொடர்ந்து கர்ப்பம் தரிக்க வைக்கப்படுகின்றன. மனிதர்களை போல பசுக்கள் தங்கள் குழந்தைகளுக்காக மட்டுமே பால் சுரக்கின்றன. ஆனால், பால் விவசாயிகள் பசுக்களின் மலக்குடலில் கைகளை சொருகியும், பிறப்புறப்பில் கம்பியை திணித்தும் துன்புறுத்துகிறார்கள்.
கோழிகளுக்கு நடக்கும் சித்திரவதைகள்
இதேபோல் கோழிகளும் இனப்பெருக்க அமைப்புக்காக கொடூரமான சுரண்டல்களுக்கு ஆளாகின்றன. ஆனால், கோழிகள் இடும் முட்டைகளை வளர்க்க முடியாது. தாய் கோழிகள் பேட்டரி கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு இறகுகளை விரிக்க முடியாத அளவுக்கு கொடுமைப்படுத்தப்படுகின்றன. 18 மாதங்கள் இத்தகைய சித்திரவதைகளை அனுபவித்த பிறகு இறைச்சிக் கூடங்களுக்கு கோழிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
விலங்குகள் மீதான பாலியல் வன்கொடுமை
இதேபோல் பன்றிகளும் பல்வேறு வதைகளுக்கு இலக்காக்கப்படுகின்றன. இறைச்சி, முட்டை மற்றும் பால் தொழில்களில் ஈடுபடுத்தப்படும் விலங்குகளும், பறவைகளும் பொழுதுபோக்கிற்காக பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொல்லப்படுகின்றன. விலங்குகள் ஒன்றும் இயந்திரங்கள் அல்ல. அவற்றுக்கும் உணர்வுகள் உள்ளன. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண் உயிரினங்கள் மீதான துஷ்பிரயோகங்களையும் நிறுத்துவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]