முட்டை ஒன்றின் விலையை 6 ரூபாவால் குறைக்க முடியும் என அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கால்நடை தீவனத்துக்கு விதிக்கப்படும் வற் வரியை நீக்கினால் முட்டையின் விலையை 6 ரூபாயினால் குறைக்க முடியும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
வற் வரி நீக்கப்பட்டால் எதிர்காலத்தில் முட்டைகளை இறக்குமதி செய்யவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, வற் வரி நீக்கப்பட்டால், உள்ளூர் உற்பத்தி அதிகரிக்கும் என்பதுடன், உள்ளூர் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் எனவும் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.