இந்தியாவில் டெல்லியில் அமெரிக்க பெண் தூதுவர்கள் குண்டுகள் துளைக்காத கவச காருக்கு பதிலாக முச்சக்கர வண்டியை ஓட்டி வேலைக்குச் செல்கின்றனர்.
இந்தியாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரகங்கள் உள்ளன. அவற்றில் அந்நாட்டு தூதர்கள் வேலை செய்து வருகின்றனர்.
அமெரிக்காவை சேர்ந்த 4 பெண் தூதுவர்கள் டெல்லியில் உள்ள தூதரகத்தில் வேலை செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கவச வாகனங்களில் செல்வதற்கு பதிலாக முச்சக்கர வண்டியில் பயணம் செய்வதிலேயே விருப்பம் கொண்டுள்ளனர். இதற்காக தனியாக முச்சக்கர வண்டியை வாங்கி வைத்துள்ளனர். அவற்றிலேயே 4 தூதுவர்களும் பணிக்கு செல்கின்றனர்.
இதுதவிர, பணி நிமித்தம் எங்கேனும் செல்ல வேண்டுமென்றாலும் அவர்கள் கருப்பு மற்றும் பிங்க் வண்ணம் கொண்ட முச்சக்கர வண்டியிலேயே பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களே முச்சக்கர வண்டியை ஓட்டியும் செல்கின்றனர். அப்படி என்ன அதில் விருப்பம் உள்ளது என்பதற்கு அவர்களே விளக்கமும் அளித்துள்ளனர். அது, வெளியே போகும்போது, சுதந்திரம் ஆக பயணிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கின்றனர்.