தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் புத்துணர்ச்சியுடனும், பளிச்சென்றும் காணப்படும்.
இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.
சருமத்திற்கு இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. இதில் பச்சை பால் மற்றும் மஞ்சள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவை இரண்டின் கலவையானது சருமத்தை இறுக்கமாக்குகிறது. பல தனிமங்கள் நிறைந்த மஞ்சள், விட்டமின் ஏ மற்றும் பி நிறைந்த மூலப் பாலுடன் கலக்கும்போது, டோனராகச் செயல்பட்டு பல நன்மைகளைத் தருகிறது.
சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்திலுள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி சரும துளைகளிலுள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும்.
தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகத்தில் உள்ள தழும்புகள் கருமை நீங்கி முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.
சருமத்திற்கு, பச்சை பால் மற்றும் மஞ்சள் சேர்த்து ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தினால் ஈரப்பதம் கிடைக்கும். இது தவிர, சரும நிறமும், சரும பளபளப்பும் காணப்படும். இதன் மூலம் உங்கள் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
சரும ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்த மேற்கூறிய அழகுக் குறிப்புகளை செய்வதோடு தினசரி நாம் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். அடிக்கடி தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் அதிகம் குடிப்பதால் உடலிலுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும். தண்ணீர் குடிப்பதோடு நல்ல தூக்கமும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.