ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணாந்து தலைமையிலான உயர் மட்டக் குழுவுடன் முகநூல் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதிகள் குழு இன்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முகநூல் சமூக வலைத்தளம் ஊடாக ஆவேசமான கருத்துக்களை நீக்குவதற்கு முடியுமான வகையில் முகநூல் உரிமையாளர் பக்கங்களுக்குள் பிரவேசிப்பது தொடர்பில் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சமூக குரோத நடவடிக்கைகள் எனும் போர்வையில் அரசாங்க குரோத பேச்சுக்களை தடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாக சமூக வலைத்தள விமர்ஷகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.