தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது 90 நாள்களில் 17.07 இலட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.
கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தொடங்கி ஜூலை 6 ஆம் திகதி வரையிலான 90 நாள்களில், முகக் கவசம் அணியாதவா்கள் மீது 17 இலட்சத்து 7,454 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 8,295 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8 ஆம் திகதி தொடங்கி ஜூலை 6 ஆம் திகதி வரை 86,686 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.