கடந்த சில நாட்களாக மீ டூ விவகாரம் திரைத்துறையையே புரட்டிப்போட்டு வருகிறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் சின்மயி – வைரமுத்து விவகாரத்தை தொடர்ந்து சுசிகணேசன் – லீலா மணிமேகலை விவகாரம் வெடித்துள்ளது. இந்த மீ டூ விவகாரம் குறித்து சரி, தவறு, தேவையில்லை என பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நடிகை ஆண்ட்ரியா மீ டூ மற்றும் காஸ்டிங் கவுச் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கடின உழைப்பில் நம்பிக்கையுள்ள யார் ஒருவரும் இந்த காஸ்டிங் கவுச் விஷயத்திற்கு உடன் பட கூடாது. தன்னம்பிக்கை குறைவானவர்களும், ஏதோ ஒருவிதத்தில் முன்னேற நினைப்பவர்களும் தான் இந்த காஸ்டிங் கவுச்சிற்கு பலியாகின்றனர்.
நான் இதுநாள்வரை இப்படி ஒரு காஸ்டிங் கவுச் பிரச்சனையை எதிர்கொண்டதில்லை. காரணம் என்னிடம் சில நிமிடங்கள் பேசினாலே நான் எப்படிப்பட்டவள், தொழிலை எந்த அளவுக்கு நேசிப்பவள் என்பது புரிந்து, அவர்கள் எண்ணத்தை மூட்டை கட்டி வைத்து விடுவார்கள். ‘மீ டூ’ மூலம் ஒருவரை குற்றம் சாட்டுவதற்கு முன் குற்றம் சாட்டுபவர்கள் தன்னைத்தானே ஒரு முறை கேள்வி கேட்டுக் கொள்வது அவசியம்” என கூறியுள்ளார் ஆண்ட்ரியா.