மீ டூ மூலம் இயக்குனர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் அளிக்கும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இது குறித்து ஆலோசிக்க நடிகர் சங்கம் தீர்மானித்துள்ளது.
மீ டூ குறித்து அவசர ஆலோசனை நடத்துவதற்காக நடிகர் சங்கத்தின் செயற்குழு இன்று கூட உள்ளது. மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில், தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் மீ டூ புகார்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.