மீள்தன்மை கொண்ட கீபோர்ட்டுடன் அறிமுகமாகும் மினி கணணி
தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக நாளுக்கு நாள் இலத்திரனியல் சாதனங்களின் அளவு சிறிதாகிக்கொண்டே செல்கின்றது.
இதன் பயனாக கணணி சாதனங்களும் சிறிய அளவில் உருவாக்கப்பட்டு அறிமுகமாகிவருகின்றன.
தற்போது Vensmile K8 எனும் மினி கணணி உருவாக்கப்பட்டுள்ளது.
இக் கணணியானது Intel Atom x5-Z8300 Cherry Trail Processor, பிரதான நினைவகமாக 4GB RAM என்பனவற்றுடன் 64GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது.
இவை தவிர மீள் தன்மை கொண்ட கீபோர்ட்டினையும் இணைத்து பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் பிற்பகுதியில் சந்தைக்கு வரவுள்ள இக் கணணியின் விலையானது 200 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.