கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 11 ஆம் திகதி மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு மற்றும் மாஞ்சோலை ஆகிய மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டிருந்தன.
குறித்த மூன்று பிரதேசங்களும் 19 நாட்களின் பின்னர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், தனிமைப்படுத்தல் பகுதியை விடுவிப்பு செய்ய உதவிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க. கருணாகரன் மற்றும் கடமையில் ஈடுபட்ட இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோர்களுக்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.