பிரான்ஸ் -Mauvières (Indre) இலுள்ள ஒரு உணவகத்தில் மீன் உணவொன்றைச் சாப்பிட்ட பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சாப்பிட் மீனுடன் வழங்கப்பட்ட திரவத்தில் (sauce) இல் வாசனை இலைகளிற்குப் பதிலாக, கஞ்சா இலைகளைக் கலந்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவில் எப்படி கஞ்சா கலக்கப்பட்டது என்றும், அது எவ்வாறு இவர்களிற்குக் கிடைத்தது என்றும் ஜோந்தார்மினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தங்களிற்கு ஏற்கனவே தயாரிக்கப்பட் திரவமே, வழைமையான விநியோகத்தினரால் வழங்கப்பட்டது, என்றும் தனையே தாம் உபயேகித்ததாகவும் விசாரணையில் உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பகுதி மக்கள் இந்தச் சம்பவத்தால் பெரிதும் அதிர்ச்சியரடைந்துள்ளனர். இருப்பினும் தாங்கள் உணவக உரிமையாளரிற்கு ஆதரவாகவே இருக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.