பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் மீனா குமரி. இளம் வயதிலேயே (38) இறந்துவிட்டார். இவரது வாழ்க்கையை தற்போது சினிமாவாக எடுக்க உள்ளார் கரண் ராஸ்டன். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மீனா குமரி ரோலில் நடிகை சன்னி லியோன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கரணும், சன்னி லியோனை சந்தித்து பேசியிருக்கிறார். அவரும் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார்.
இதுகுறித்து கரண் கூறுகையில், மீனா குமாரி ரோலுக்கு சன்னி லியோன் மிகப்பொருத்தமாக இருக்க மாட்டார் தான். ஆனாலும், அவர் இப்படத்தில் நடிக்க ஆர்வமாய் உள்ளார் என்று கூறியுள்ளார்.