மீண்டும் வெளிவருமா வெள்ளைக்கொடி விவகாரம்? – குழப்பத்தில் பொன்சேகா!
அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த நல்லாட்சியின் முக்கிய தேவையாக இருந்தது முதலில் மஹிந்தவை இல்லாமல் செய்து விடுவது. அதற்காக அவரின் ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது ஆனால் வெள்ளைவான் போன்றவை காணாமல் போனோர் போன்றவை இரகசியங்களாக காணப்பட்டு வருகின்றது.
மஹிந்தவின் பக்க பலங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டு வரும் வேளையில் ஊழல் மக்களுக்கு புளித்துப்போய் விட்டது அதே போல மஹிந்த தரப்பினர் சிறைக்கு செல்வதும் வெளியே வருவதும் அவருடைய ஆட்சி காலத்தில் அவர்கள் வெளிநாட்டு விஜயங்கள் மேற்கொள்வது போன்றாகி விட்டது.
தற்போது அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றால் அவர்கள் மீது முழு நாடும் சர்வதேசமும் எதிர்ப்பார்த்துள்ள போர்க் குற்றங்கள் திணிக்கப்பட வேண்டும் அப்போதே மஹிந்த தரப்பு மீண்டும் எழ முடியாத வகையில் அடக்க முடியும்.
அதற்கு மைத்திரி ரணில் தரப்பு தம் பக்கம் பிழைகள் திரும்பாத வகையில் மெதுவான காய்நகர்த்தலில் ஈடுபட்டது. அதற்கான வழிமுறையில் ஒன்றாக அண்மையில் பான் கீ மூன் வருகையை அரசு பெரிதும் எதிர்ப்பார்த்தது.
ஆனால் அதனை விட ஒரு படி வேகமாக சென்ற மஹிந்த தரப்பு ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவும் மலேசியாவில் விடுதலைப்புலிகள் என்ற மாயையும், நாட்டில் பதற்ற நிலையை ஏற்படுத்தி சாதூர்யமாக திசை திருப்பி விட்டது.
தற்போது விடுதலைப்புலிகள் என்ற கதைகளை அன்றாடம் எழுப்பி விட்டு போர்குற்றங்கள் தொடர்பில் அரசுபக்கம் சர்வதேசத்தை திசை திருப்ப மஹிந்த தரப்பு முயன்றுள்ளது.
அதற்காக நடைபெற்ற போரில் எத்தகைய இனவழிப்பும் ஏற்பட வில்லை எனவும் விடுதலைப்புலிகள் நேர்மையானவர்கள் எனவும் மஹிந்த சார்பு தரப்பு வெளிப்படையாக கூறிக்கொண்டு வருகின்றது.
இதேவேளை இதற்காக இதுவரை அமைதியாக இருந்து வந்த பொன்சேகாவையும் இழுத்துவிட்டுள்ளது. ஏற்கனவே அவர் சீண்டப்பட்டதால் இறுதியுத்தத்தில் சரணடைந்தவர்களையும் வெள்ளைக்கொடி பிடித்து வந்தவர்களையும் சுட உத்தரவிட்டதாக பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
தற்போது விடுதலைப் புலிகள் மீதான யுத்தத்தை நான் முழுமையாக நிறைவு செய்ய வில்லை என்று கூறும் மஹிந்த தான் போர்க்குற்ற விவகாரத்தில் முந்திக்கொண்டு அதனை தற்போதைய அரசு பக்கம் திருப்பிவிட முனைவதாக கருத்துகள் வெளிப்படுத்தப்படுகின்றது.
இதன் காரணமாகவே போர்க் குற்றம் அதிகளவாக பேசப்படுகின்றது, அதே போல தமிழீழ கோரிக்கைகள், பிரபாகரனுடன் ரணில் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் போன்றவை நினைவு படுத்தப்பட்டு கொண்டு வருகின்றது.
பொன்சேகாவும் அதில் உள்வாங்கப்படுகின்றார். இதன் போது பாதிக்கப்படுவது பொன்சேகா மட்டுமல்ல ரணிலும் மைத்திரியுமே.
அத்தகைய இக்கட்டான சூழ்நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தி விட்டால் மஹிந்த மீண்டும் செல்வாக்கு பெற கால இடைவெளி ஒன்று கிடைத்து விடும்.
இத்தகையான காரணங்களுக்காக முன்னாள் இராணுவத் தளபதிகளையும், யுத்த காலத்தில் தனக்கு பலமாக இருந்தவர்களையும் தன் பக்கம் சேர்த்துக்கொண்டும் அதி வேகமாக யுத்தம் தொடர்பில் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனால் பொன்சேகா அதிர்ச்சியில் இருப்பதாகவும் அதன் காரணமாகவே புத்தகம் வெளியிடப்போவதாக கருத்துகள் தெரிவித்துள்ளதாகவும், அமைதியாக இருந்து வந்த பொன்சேகா பதற்ற நிலையை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் பொன்சேகா ரணில் மூலம் காப்பாற்றப்பட்டு வருவதற்கு காரணம் அவர் மூலம் முக்கிய தேவை இருப்பதன் காரணமாகவே எனவும் இத்தகைய சூழலில் எத்தனை வெள்ளைக்கொடி விவகாரங்கள் வெளிவரப்போகின்றது, அவ்வாறு ஏற்படுமாயில் ரணில் மைத்திரி என்ன செய்ய போகின்றார்கள் என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது எனவும் அவதானிகள் பலத்த சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர்.