நாட்டில் தற்போது நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் போது முகக்கவசம் அணிவது மிகவும் சிறந்தது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகளில் மற்றும் பிற சுகாதார நிறுவனங்களில் தற்போது பாரிய மருந்து பற்றாக்குறை நிலவுகின்றது.
தற்போது கொவிட் தொற்றாளர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் நாட்டில் தற்போது பல்வேறு பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதால் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசங்களை அணிவது சிறந்தது.
மேலும் முகக்கவசங்கள் அணிவதன் மூலமாக பெரும்பாலும் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளைத் தடுக்க அவை உதவுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பொது பிரதேசங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டிய அவசியமில்லை என்று புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை ஆதரித்து சுகாதார திணைக்களம் பணிப்பாளர் நாயகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, இது ஒரு பிற்போக்கு நடவடிக்கை ஆகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
மக்கள் பொதுக் கூட்டங்களில் கூடும் பொது கொவிட் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]