நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மின்துண்டிப்பு தொடர்பான புதிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது
இதன்படி, நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் இன்றையதினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளை மற்றும் நாளை மறுதினங்களில் நாட்டின் சில பகுதிகளில் மின் தடை ஏற்படக் கூடிய வாய்ப்பிருப்பதாகவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எனினும், எதிர்வரும் புதன்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் வழமையான முறையில் இடம்பெறும் எனவும் இலங்கை மின்சார சபையினால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]