மாசாணி’ படத்தில் பேய் வேடத்தில் நடித்த இனியா மீண்டும் ‘சதுர அடி 3500’ படத்தில் பேய் வேடம் ஏற்கிறார். இப்படத்தின் டிரெய்லரை நேற்று, தயாரிப்பாளர் எஸ்.தாணு வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.
படம் பற்றி இயக்குனர் ஜெய்சன் கூறும்போது, ‘சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பேய் இருக்கிறதா? இல்லையா? அது இருந்தால் எப்படி அதனிடம் அணுக வேண்டும் என்று திகிலுடன் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு நடந்தபோதுகூட சில அமானுஷ்ய அனுபவங்கள் பட குழுவினரை பாதித்தது. பெங்களூர், சாலக்குடி, சென்னையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. நிகில், ரகுமான், சுவாதி தீட்சித் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தயாரிப்பு ஜெ.எஸ்.கே.கோபி’ என்றார். பட விழாவில் நிகில் மற்றும் டெக்னிஷியன்கள் கலந்துகொண்டனர். ரகுமான், இனியா போன்ற பிரதான நட்சத்திரங்கள் விழாவில் மிஸ்ஸிங். சொந்த பட புரமோஷன் நிகழ்ச்சிக்கு கூட நட்சத்திரங்கள் வராமல் தவிர்த்ததுபற்றி ஒரு சிலர் புகார் எழுப்பினர்.