முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிடம், எதிர்வரும் திங்கட்கிழமை மூன்றாவது தடவையாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை, காலை 9.00 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணியளவில் இரண்டாவது நாளாக ஆஜராகிய அவர், மாலை 6 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஒலிப்பதிவு தொடர்பிலேயே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், நாலக டி சில்வாவிடம், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.