நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்துறையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் கலவரமும் இடம்பெற்றுள்ளது. மகிழுந்துகள் எரிந்து இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று 20.00 மணி அளவில் Toulouse மாவட்டத்தின் Reynerie மற்றும் Bellefontaine ஆகிய இரு நகரங்களில் இருந்து ஒன்றிணைந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். எவ்வித ஒளிவு மறைவும் இன்றி காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கோடு மட்டுமே அவர்கள் இந்த கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தினர். ஜோந்தாம் மற்றும் CRS படையினர் என நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஒன்றிணைந்து, அதே எண்ணிக்கையுள்ள இளைஞர்களை கட்டுப்படுத்தினர்.
இளைஞர்கள் காவல்துறையினரை தாக்குவதற்கு முன்பு, பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட மகிழுந்துகளை எரித்துள்ளனர். Bellefontaine காவல்நிலையத்துக்கு கடந்த மார்ச் மாதத்தில் பிரதமர் எத்துவா பிலிப் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.