புதிய அமைச்சுக்கள் தொடர்பில் நயமிக்கப்பட்ட செயலாளர்கள் இன்று மாலை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இந்த நியமனம் இடம்பெற்றது.
இதற்கமைய செயலாளர்கள் விபரங்கள் இதோ..
30 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களுக்கான 30 செயலாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் நியமித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஹேமசிறி பெர்னாண்டோ – பாதுகாப்பு அமைச்சு
எஸ்.எம். மொஹமட் – தபால் சேவை மற்றும் முஸ்லிம் சமய விவகாரம்.
வீ. சிவஞானசோதி – தேசிய கொள்கை, பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, நிபுணத்துவ அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு
பத்மசிறி ஜயமன்னா – கல்வியமைச்சு.
ஆர்.எம்.டி.பி. மிகஸ்முல்ல – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு.
ஜே.ஜே. ரத்னசிறி – அரச நிர்வாகம், இடர் முகாமைத்துவ அமைச்சு.
கலாநிதி பீ.எம்.எஸ். பட்டகொட – மின்வலு, எரிசக்தி, வர்த்தக அபிவிருத்தி அமைச்சு
எல்.பி. ஜயம்பதி – போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சு.
என்.ரூபசிங்க – பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு.
எச்.ரி. கமல் பத்மசிறி – உள்விவகாரம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சு.
ஜே.ஏ. ரஞ்சித் – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு.
எல்.டி. சேனாநாயக்க – பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் வறண்ட வலய அபிவிருத்தி அமைச்சு.
டி.எம்.ஏ.ஆர்.பீ. திஸாநாயக்க – மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.
பீ. சுரேஷ் – மலையக புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சு
எச்.எம். காமி செனவிரட்ன – தொழில், தொழிற்சங்க தொடர்புகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு
கே.டி.என்.ஆர். அசோக – கைத்தொழில், வணிகம் மற்றும் நீண்டகாலம் இடம்பெயர்தோரை மீள்குடியேற்றும் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு.
கே.டி.எஸ். ருவான்சந்திர – விவசாயம், கிராமிய பொருளாதாரம், கால்நடை அபிவிருத்தி, நீர்பாசனம், மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு.
ரவிந்திர ஹேவாவிதாரண – அரச நிறுவனங்கள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு.
டப்ளியூ.எச். கருணாரத்ன – காணி, நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு.
எம்.வை.எஸ். தேசப்பிரிய – தேசிய ஒருமைப்பாடு, அரசமொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சு.
கே.பி. பேர்னட் வசந்த சில்வா – வீடமைப்பு, நிர்மாணத்துறை,கலாசார விவகார அமைச்சு.
எஸ்.டி. கொடிக்கார – அபிவிருத்தி வழிமுறை, சர்வதேச வர்த்தகம், விஞ்ஞான தொழிற்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு.
டப்ளியூ. ஏ. சூலானந்த பெரேரா – தொலை தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
வசந்த பெரேரா – சுகாதாரம், போஷாக்கு, சுதேச மருத்துவத்துறை அமைச்சு.
எம்.எம்.பீ.கே. மாயாதுன்னே – நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சு.
எஸ்.ஹெட்டியராச்சி – நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு.
ஆர்.பீ. ஆரியசிங்க – வெளிவிவகார அமைச்சு.
பராக்கிரம திஸாநாயக்க – துறைமுகங்கள்,கப்பல் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சு.
சுனில் ஹெட்டியராச்சி – பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி மற்றும் பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சு.