இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் தயசிறி ஜெயசேகரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
கொழும்புவில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜெயசேகரா, இதுபோன்ற குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு உகந்ததாகும் என்று தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக யாரேனும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால், உடனடியாக விசாரணை தொடங்கப்படும் என்றும் ஜெயசேகரா உறுதியளித்தார். 2011ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பை வென்றது.
இந்த போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடைபெற்றதாக அப்போதே புகார் எழுந்தது. ஆனால், பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.