மீண்டும் ஒரு விபத்து: சிக்கிய இலங்கை வீரர்
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2 தினங்களுக்கு முன்பு இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் நுவன் குலசேகர காரில் ஏற்படுத்திய விபத்தில் 28 வயதான ஒருவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குலசேகரா பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இதே போன்று கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரமித் ரம்புக்வெல இன்று கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.
ரமித் ரம்புக்வெல்ல முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.