மீண்டும் இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு வூஹான் மாகாணத்தில் உள்ள சீன நிறுவன ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதரகம் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏனைய மாகாணங்களிலும் நகரங்களில் இருந்தும் இலங்கைக்கு செல்பவர்கள் குறைந்தது 14 நாட்களுக்கு தொற்று நோய் தொடர்பான கால வரையறையை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு சீன அதிகாரிகள் அனைத்து குழுவினரின் விஜயங்களையும் இடை நிறுத்தியுள்ளனர்.
இதேவேளை, வூஹான் நகரத்துக்குள் உட்பிரவேசித்தல் மற்றும் வெளியேறுவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.