12 வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்த நடிகை ரேவதி, தற்போது பாலிவுட்டில் இயக்குனராக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.80-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி. இவர் நடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது படங்களை இயக்குவதிலும் கவனமாக இருந்தார். முதல் படமாக 2002-ல் ‘மித்ர மை ப்ரெண்ட்’ என்ற ஆங்கிலப் படத்தை எடுத்தார். இந்தப்படம் இரண்டு விருதுகளைப் பெற்றது. இதையடுத்து 2004-ம் ஆண்டு ‘பிர் மிலேங்கே’ என்ற இந்தி படத்தை இயக்கினார். பின்னர் 2009-ல் மலையாளத்தில் வெளியான ‘கேரளா கபே’ என்ற படத்தை பத்து பிரபலமான இயக்குனர்கள் எடுத்தனர். அதில் ரேவதியும் ஒருவர். இதையடுத்து படங்களை இயக்காமல் இருந்து வந்த ரேவதி, தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

#No 1 TamilWebSite
