மிஷ்கின் படத்தில் அக்ஷராஹாசனுக்கு இப்படி ஒரு வேடமா ?
பிசாசு படத்துக்கு பின் மிஷ்கின் இயக்கத்தில் எந்த படமும் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் இவர் தற்போது விஷாலை வைத்து துப்பறிவாளன் என்ற படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே இப்படத்தில் விஷாலை தவிர பிரபல நடிகர் பிரசன்னா வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார்.
தற்போது இன்னொரு கதாபாத்திரத்துக்கு கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன் கமிட் ஆகியுள்ளார். இவர் தற்போது அஜித் நடித்து வரும் தல 57 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படத்தில் பிரசன்னாவை தவிர இன்னொரு இளம் லேடி டான் கதாபாத்திரம் உள்ளது, மிஷ்கின் இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி விஷால் மூலம் அக்ஷராஹாசனுக்கு ஸ்கிரிப்ட் அனுப்பப்பட்டது. அவரும் ஸ்கிரிப்ட்டை படித்தவுடன் நான் செய்கிறேன் என்று தகவல் அனுப்பியுள்ளாராம்.
ஹீரோவுக்கு நிகரான இந்த கதாபாத்திரத்தின் படப்பிடிப்பில் அடுத்த மாதம் கலந்து கொள்ளவுள்ளாராம் அக்ஷ்ராஹாசன்.