மியான்மரில், அரசு அலுவலகத்தை சூறையாட முயன்றவர்கள் மீது, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்; இதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மியான்மரில், தேராவதா என்ற புத்த மதத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்; ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். இந்நிலையில், யாங்கூனில் உள்ள மராக் யூ என்ற இடத்தில், பழமையான புத்தர் கோவில் உள்ளது; இங்கு, நேற்று முன்தினம் நடந்த விழாவில் பங்கேற்பதற்காக, புத்த மதத்தை சேர்ந்த, 7,000 பேர் திரண்டனர்.
அவர்கள், ஊர்வலமாக சென்றபோது, கூட்டத்தில் திடீரென கலவரம் வெடித்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள், அருகில் இருந்த அலுவலகம் ஒன்றில் புகுந்து, சூறையாடினர். கலவரத்தை கட்டுப்படுத்த, போலீசார் துபபாக்கியால் சுட்டனர்; இதில், ஏழு பேர் உயிர் இழந்தனர்; ௧௩ பேர், காயம் அடைந்தனர். கலவரத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.