மின்னேரியா, சமகிபுரம் பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடந்த நான்கு மாத காலமாக காணாமல் போயுள்ளார்.
மின்னேரியா, சமகிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தந்தையொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல்போனவரது மனைவி இது தொடர்பில் மின்னேரியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பில் காணாமல்போனவரது மனைவி தெரிவிக்கையில்,
நான்கு பிள்ளைகளின் தந்தையான எனது கணவர் இறுதியாக கண்டி, பல்லேகலை பிரதேசத்தில் உள்ள பொறியியல் சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த நான்கு மாத காலமாக காணாமல் போயுள்ளார்.
கணவரின் பணத்தில் தான் நானும் எனது நான்கு பிள்ளைகளும் வாழ்ந்து வருகின்றோம். காணாமல் போனவர் தொடர்பில் தகவல் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.