இந்தியாவின் அசாம் மாநிலத்தில் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி 18 காட்டு யானைகள் பலியாகின.
அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அரச வனவளத்துறை திணைக்களத்தின் முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த பகுதியில் பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் யானைகள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், குறித்த யானைகளின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியவும், எத்தனை யானைகள் உயிரிழந்தன என்பதைக் கண்டறியவும் விசாரணைகள் தொடர்வதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.