கமல்ஹாசன் இந்துத்துவா பயங்கரவாதம் பற்றி சமீபத்தில் பேசியிருந்தார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. உ.பியில் கமல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கமலின் கருத்து குறித்து எஸ்.வி.சேகர் கூறியிருப்பதாவது:
கமல் இவ்வளவு நாளாக கருத்து சொல்லிக்கொண்டிருந்தார் இப்போது குழப்பமாகி விட்டார். மூன்றாந்தர அரசியல்வாதி போன்று பேச ஆரம்பித்திருக்கிறார். இந்து தீவிரவாதம் என்ற தவறான கற்பித்தல் அவருக்கு இருக்கிறது. கமலை வெளியில் இருந்து பார்க்கும்போது அறிவாளியாகத்தான் தெரிந்தது. ஆனால் அடிக்கடி பேசும்போது அவரது உண்மை முகம வெளிப்படுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அடிக்கடி கேரளாவை புகழும் கமல் பேசாமல் கேரளாவில் போய் வாழட்டும், இந்து மதம் லட்சக்கணக்கான வருடங்கள் பழமையானது. நல்ல வாழ்க்கை முறையை கற்றுத்தருவது எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன் என்பவர்களுக்கு இந்து மதம் பிடிக்காது. கமல் மின்சார பெட்டியில் கைவைப்பது போல தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபடுகிறார். இந்த மதத்தை எதிர்ப்பது என்பது சினிமா ஸ்ட்ண்ட் போன்றதல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். சிறுபான்மையினருக்கு ஆதரவாக பேசுங்கள் தறில்லை. பெரும்பான்மையினருக்கு எதிராக பேசாதீர்கள்.
இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.