நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் அவ்வாறான நிலை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகளை முன்வைத்து இலங்கை மின்சாரசபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
திடீர் மின்தடை ஏற்பட்டால் அதனை நிவர்த்திப்பதற்கான நடடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதற்கமைய சில மின் உற்பத்தி இயந்திரங்களை குறைந்த இயக்க மட்டத்தில்பேணுதல், சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு தேவையேட்படும் போது குறைந்த கேள்வி நிலவும் காலங்களில் சூரிய சக்தி மின் உற்பத்தியைக் குறைத்தல் என்பன முக்கிய நடவடிக்கைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை குறித்த ஆய்வின் பின்னர் இந்த நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சூரிய மின் உற்பத்தியின் அதிக மின் உற்பத்தியால், உற்பத்திக்கும் தேவைக்கும் இடையில் சமநிலையின்மை ஏற்பட்டது. இது ஒட்டுமொத்த மின்தடைக்கு காரணமாக அமைந்ததாக மின்சாரசபை மேலும் தெரிவித்துள்ளது.