பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், முதலிடம் பிடித்தார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில், பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குபவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
இதில், சிறந்த பேட்ஸ்வுமன் வரிசையில் 2வது இடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், 753 புள்ளிகளுடன், ‘நம்பர்–1’ இடம் பிடித்தார்.
ஆஸ்திரேலியாவின் எல்ஸ் பெர்ரி (725), நியூசிலாந்தின் சாட்டர்ஒயிட் (720) தலா 1 இடம் முன்னேறி, 2, 3வது இடத்தில் உள்ளனர். சிறந்த பவுலர்கள் வரிசையில் இந்திய வீராங்கனை கோஸ்வாமி (652) இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்ரிக்காவின் மரிஜான்னே (656) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.