காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையில், மிகப்பெரும் போதை மருத்து கடத்தல்காரர்கள் 14 கைது செய்யப்பட்டுள்ளனர். பல விதங்களிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள், ரொக்க பணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
Toulouse இன் Mirail நகரில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் இந்த கும்பல் சிக்கியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை காலையில் ஆரம்பித்த இந்த சுற்றி வளைப்பில் மொத்தமாக 14 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் நேரடி போதை மருந்து விற்பனையாளர்களும், மீதமானவர்கள் வாடிக்கையாளருமாவர். கடந்த சில மாதங்களாக இவர்கள் கண்காணிக்கப்பட்டு, பின் தொடரப்பட்டே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா, ஒரு கிலோ கொக்கைன் போதை மருத்து உட்பட, மேலும் சில மிக ஆபத்தான போதை மருந்துகள், ஊசிகள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன. தவிர இரண்டு இயந்திர துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள், ஒரு நாளைக்கு குறைந்தது 500 வாடிக்கையாளர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்வதாகவும், தினமும் 25,000 யூரோவில் இருந்து 35,000 யூரோ வரை பணத்துக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.