மிகக் குறைந்த விலையில் உருவாக்கப்பட்ட Freedom 251 அறிமுகமாகும் திகதி இதோ!
சில வாரங்களுக்கு முன்னர் உலகெங்கும் பரபரப்பாக பேசப்பட்ட விடயம் வெறும் 4 அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் விற்பனைக்கு வரவுள்ள கைப்பேசி தான்.
Freedom 251 எனும் இக் கைப்பேசியானது இந்தியாவில் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் எதிர்வரும் 30ம் திகதி அதாவது நாளை மறுதினம் முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி முதற்கட்டமாக சுமார் 200,000 கைப்பேசிகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
இக்கைப்பேசிகள் 4 அங்குல அளவுடையதும் 960 x 540 Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Quad Core 1.3GHz Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவரி Android 5.1 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 3.2 மெகா பிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.