மருதானை, மாளிகாவத்தை பகுதியில் இன்று(29) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், முச்சக்கர வண்டி மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரினதும் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளவர்கள் 20 மற்றும் 26 வயதான இளைஞர்கள் என மருத்துவமனை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.