கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கிச் சென்றுள்ளதாக தரைவழி வட்டாரங்கள் மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சவூதி அரேபிய விமான சேவையின் எஸ்.வீ. 788 விமானத்தில் பயணிப்பதாக மாலைதீவு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இந்த விமானத்தில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.