ஆப்பிரிக்க நாடான மாலியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐநாவின் மூன்று அமைதி தூதுவர்கள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில்,”மாலியிலுள்ள திஸ்சலைட் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று அமைதி தூதுவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு மாலியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐ நாவின் அமைதி தூதுவர்கள் 80 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.