மாலபே நெவில்பிரணான்டோ வைத்தியசாலை இன்று ( 17 ) முதல் அரசுடமையாக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெறவுள்ளது. அரசியல்வாதிகள் உட்பட அரச அதிகாரிகள் பலர் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மூன்று பில்லியன் ரூபா பெறுமதியான இவ்வைத்தியசாலையின் கட்டிடமும், அதில் உள்ள உபகரணங்களும் இன்று முதல் அரசுடமையாக்கப்படவுள்ளது. அத்துடன், இதில் கடமையாற்றிய ஊழியர்களும் இன்று முதல் அரச துறையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவ்வைத்தியசாலையின் தலைவர் டாக்டர் நெவில் பிரணாந்து குறிப்பிட்டுள்ளார்.