வடக்கு மாகாணத்தின் ஆளுனரால் நடத்தப்படும் மாதாந்த வட்ட மேசை கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்றது .
DATA அமைப்பின் வேண்டுகோளுக்கு அமைவாக,ஆளுனரால் இன்றைய கலந்துரையாடல் முற்றும் முழுதாக பாதிக்கப்பட்ட விசேட தேவை உடையோருக்கான கலந்துரையாடலாக இடம்பெற்றது .
இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் கட்டாயமான கோரிக்கையாக 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு அரச ,தனியார் பொது – கட்டட அனுமதி பெற வரும் போது மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகும் வசதி கொண்ட வரைபடத்தோடு வந்தால் மட்டும் அனுமதி வழங்குமாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து வருகின்ற ஆறு மாத காலத்திற்குள் அனைத்து பொது இடங்களிலும் விசேட தேவை உடையோர் அணுகும் வசதி கொண்ட கட்டடமாக அனைத்து கட்டடங்களும் மாற வேண்டும் என்றும் , மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு தற்போது 3% மாக உள்ளது இது வரும் காலங்களில் 6 வீதமாக மாக மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாக கெளரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார் .
இதனைவிட மாற்றுத் திறனாளிகளுக்கானா பல்வேறுபட்ட செயற்ப்பாடுகள் தொடர்பிலும்,அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ,ஆராயப்பட்டது .
வடக்கு மாகாணத்தை மாற்றுத் திறனாளிகளுக்கானா தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்ட சிறப்பான மாகாணமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார் .