எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த சில நாட்களாக வடக்கு மற்றும் கிழக்கில் பல சமூக நலன்புரி நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
“ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு” என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பல மருத்துவமனைகளுக்கு அத்தியவசிய வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைத்தல், “பிரபஞ்சம்” திட்டத்தின் கீழ் பல பாடசாலைகளுக்கு கணினி தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குதல், ஐநூறுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சத்காரய திட்டத்தை நடைமுறைப்படுத்தல் உட்பட பல சமூக நலன்புரித் திட்டங்களை இவ்வாறு மேற்கொள்ள முடிந்தது.
இதன் ஓர் அங்கமாக அன்மையில் மானிப்பாய்க்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், அப்பகுதி இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதற்கும் மறக்கவில்லை.