போயஸ் கார்டனுக்கு நேற்று சென்ற தீபா பரபரப்பை கிளப்பிவிட்டார், சசிகலாவுடன் சேர்ந்து கொண்டே தீபக் ஜெயலலலிதாவை திட்டமிட்டு கொலை செய்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
எச்சக்கலை, பொறுக்கி நாயே என்றெல்லாம் திட்டி தீர்த்து விட்டார்.
தன்னுடன் வந்த ராஜாவை அவமானப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினார், ஒருமையில் தீபாவை பேசிய ராஜா, தீபாவின் கணவர் மாதவனையும் அசிங்கமாக பேசினார்.
ஜெயலலிதாவின் நகைகளை திருடிக் கொண்டு ஓடியவன் தானே நீ என பேச, தீபா கேட்டுக் கொண்டே அமைதியாய் இருந்தார்.
தீபாவின் கார் டிரைவரான ராஜாவுக்கு ஏன் இவ்வளவு மரியாதை? கண்முன்னே கணவரை திட்டும் போது தீபா அமைதியாக இருப்பது ஏன்? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக ராஜாவை எம்ஜிஆர் தீபா அம்மா பேரவையின் பொதுச்செயலாளராக நியமித்தார் தீபா.
இதற்கு கடும் எதிர்ப்பு எழவே, பேரவை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார் ராஜா. தீபா- மாதவன் இருவரும் பிரிய காரணம் ராஜாவே காரணம் என கூறப்படுகிறது.