பாடசாலையில் வாந்தி எடுத்த மாணவியை கர்ப்பிணி என தெரிவித்து பாடசாலையை விட்டும் வெளியேற்றியதாக கூறப்படும் அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த அதிபர் அப்பாவி மாணவியொருவரை சமூகத்தில் கர்ப்பிணி என நிந்தனை செய்துள்ளதாகவும் கல்வி அதிகாரிகள் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அச்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.