நாட்டில் தற்போது நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு நிலையில் வடமேல் மாகாண சபையின் இன்றைய அமர்வுக்கு மகிந்த அணியினர் மாட்டுவண்டியில் சென்றுள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியும், நல்லாட்சி அரசை கடுமையாக விமர்சிக்கும் வகையிலாக எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் மகிந்த அணியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்தனர்.