மட்டக்களப்பு கொழும்பு வீதியில் பிள்ளையாரடி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மாட்டுன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் மாடும் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (01) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கிரான் கும்புறுமூலை வெம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சிறிகரன் நிசாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவ தினமான நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2.30 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, உயிரிழந்த இளைஞரின் சடலத்தை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிகள் விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.